தமிழகத்தில் ஒமிக்ரானின் இருந்து மீண்ட முதல் நபர்!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவரும், அவரைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரும், அவரது குடுப்பத்தைச் சேர்ந்த இருவரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

ஆனாலும், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அவர் குடும்பத்தை சேர்ந்த மீதம் உள்ள 5 நபர்கள் நாளை குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 31 ஆகக் குறைந்ததுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்கிரான் பாதிப்பு விபரம்:

1. சென்னை – 26 பேர்

2. மதுரை – 4 பேர்

3. திருவண்ணாமலை – 2 பேர்

4. சேலம் – ஒருவர்

You might also like