ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (16-12-1971) வங்கதேசம் (விடுதலை பெற்று ) தனி நாடக உதயமானதை நாடளுமன்றத்தில் பிரகடனம் செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அப்போது, அன்றைய ஜனசங்க தலைவராகவும் பின்னாளில் பிரதமராகவும் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் இந்திரா காந்தியை துர்கா தேவி என மக்கள் அவையில் அழைத்தார்.
(துர்கா என்னும் சொல்லுக்கு வடமொழியில் ‘வெல்ல முடியாதவள்’ என்று பொருள். தமிழில் ‘வெற்றிக்கு உரியவள்’. அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி அல்லது மேதியவுணன்கொல்பாவை என்றும் அழைக்கப்படுவதுண்டு.)
நன்றி: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16.12.2021 2 : 30 P.M