– சென்னை உயர்நீதிமன்றம்
கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண் ஊழியர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து விசாகா குழு விசாரணை மேற்கொண்டது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அதை கலைத்துவிட்டு புதியக் குழு அமைத்ததை எதிர்த்து பெண் ஊழியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது, “பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீதான விசாரணை தாமதப்படுத்துவது என்பது கடமை தவறிய செயல். இத்தகைய செயல்களை குற்றமாகவும் கருதப்பட வேண்டும்.
மேலும், அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது” என நீதிபதி வேதனை தெரிவித்தார்.