இதுவரை நடந்த துயரமான விமான விபத்துகள்!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன. இதில், முக்கிய தலைவர்கள் பலியாகி உள்ளனர்.

1973-ம் ஆண்டு மே 31-ல் நிகழ்ந்த விமான விபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி மக்களவை உறுப்பினர் மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார்.

1997 அன்று நவம்பர் 14 ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் திமுகவை சேர்ந்த அப்போதைய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் என்.வி.என்.சோமு உயிரிழந்தார்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், உத்தர பிரதேச மாநிலம் மணிப்புரி மாவட்டத்தில் நிகழ்ந்த விமான விபத்தில்  காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாதவ ராவ் சிந்தியா உயிரிழந்தார்.

அக்கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக வலம் வந்த மாதவ்ராவ் சிந்தியா ஒன்பது முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

2002-ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கைகளூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாராளுமன்ற மக்களவையின் அவைத் தலைவர் பாலயோகி உயிரிழந்தார்.

2009-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ருத்ரகொண்டா மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலத்தில் இரண்டு முறை முதலமைச்சராக அவர் பதவி வகித்தார்.

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகே அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

09.12.2021  1 : 30 P.M

You might also like