– சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி, மக்களுக்கு, 100 சதவீத தடுப்பூசி செலுத்துதல் என்ற இலக்கை அடையும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தவிர, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன.
இதனிடையே சுகாதாரத் துறையினரும் வீடு, வீடாக சென்று, தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து, அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
எனினும், பலர் இன்னும் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தடுப்பூசி போடாத நபர்களை, பொது இடங்களில் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொது சுகாதார சட்டம், 1939 பிரிவு, 71 உட்பிரிவு எண்(1)ன் படி தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.