புறாக்களைப் பற்றிய முத்தான பத்து தகவல்கள்:
புறாக்களில் மொத்தம் 344 வகைகள் உள்ளன.
புறாக்களை வீட்டில் வளர்க்கும் வழக்கம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது.
பண்டைய காலத்தில் கடிதப் போக்குவரத்துக்கு புறாக்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் கடிதப் போக்குவரத்தில் சிறந்த சேவையாற்றியதற்காக புறாக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
1900-ம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் புறா பந்தயம் இடம்பெற்றது.
மொராக்கோ, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் மக்களிடையே புறா இறைச்சி மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது.
புறாக்களால் அதிகபட்சமாக மணிக்கு 92 மைல் வேகம் வரை பறக்க முடியும்.
புறாக்களை தனியாகக் காண்பது அரிது. அவை பெரும்பாலும் கூட்டமாகத்தான் திரியும்.
1,000 மைல் தூரத்துக்கு மேல் பறந்து சென்றாலும், தங்கள் கூட்டுக்கு திரும்புவதற்கான வழியை புறாக்கள் மறப்பதில்லை.
அண்டார்டிகா, சஹாரா பாலைவனம் உள்ளிட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் புறாக்களை காணமுடியும்.
நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்