‘ஆயிஷா’ நூலைப் பற்றி ரியா ரோஷனின் விமர்சனம்:
***
சமீபத்தில் விழியன் அவர்கள் எழுதிய ‘மலைப்பூ’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தில் வரும் லட்சுமி ‘ஆயிஷா’ என்ற புத்தகத்தைப் படித்து கண் கலங்குவாள். அதை நானும் படிக்கணும் என்று ஆசைப்பட்டு அந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதைப் பற்றித் தான் இந்த விமர்சனம்.
ஆயிஷா – புத்தகத்தைப் பற்றி
இந்தப் புத்தகம் ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் கதை. அவள் பெயர் ஆயிஷா. இது ஒரு tragic story. இது ஒரு ஆசிரியைக்கும் ஒரு மாணவிக்கும் உள்ள உறவைப் பற்றிய கதை.
இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. அதன் மூலமே இந்த புத்தகம் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இந்தப் புத்தகத்திற்கு ஒரு சிறிய சுருக்கம் நான் கொடுத்திருக்கிறேன்.
ஆயிஷா – கதை
ஆயிஷாவிற்கு பெற்றோர்கள் கிடையாது. ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறாள். ஆயிஷா அவளின் ஆசிரியர்களிடம் விதவிதமாக கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள். அதனால் எல்லா ஆசிரியர்களுக்கும் அவளைப் பிடிக்காது. ஒரு ஆசிரியரை தவிர.
அந்த ஆசிரியருக்கு ஆயிஷாவின் கேள்விகள் மிகவும் பிடிக்கும். அந்த ஆசிரியரை ஆயிஷாவிற்கும் மிகவும் பிடிக்கும். அவரை தான் தாயை போல நேசித்தாள்.
இருவரும் புத்தகங்கள் Share செய்து படிப்பார்கள். நிறைய Scientific விஷயம் பேசிக் கொள்வார்கள். ஆனால் மற்ற ஆசிரியர்கள் ஆயிஷாவைத் திட்டிக் கொண்டே, அடித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஒரு நாள் ஆயிஷா ஒரு experiment செய்வாள். அடித்தால் வலிக்கவே வலிக்காததற்கு மரத்துப்போகும் ஊசி போட்டுக் கொள்வாள். ஆனால் அவளுக்கு மயக்கம் வந்து, கொஞ்ச நேரத்திலேயே அவளுக்கு பிடித்த ஆசிரியரின் மடியிலே இறந்து போய் விடுவாள்.
இது தான் கதை.
ஆசிரியரை பற்றி
ஆயிஷா இரா. நடராசன். இந்த புத்தகத்தை எழுதியவர் இவர்தான். இவர் எழுதிய அழியவிடல் என்ற புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். அதுவும் இதை போலவே ஒரு அருமையான புத்தகம்.
நன்றி: முகநூல் பதிவு