இந்திய மக்கள் தொகையில் 26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணித் தேர்வில் மட்டும் 59% இடத்தில் அவர்கள் பணியில் அமர்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை பற்றிய புரிதல் டிஎன்பிஎஸ்சி-க்குப் படிக்கும் போட்டித் தேர்வர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
அதற்கான தீர்வை அடைய யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேர்வுகளைத் தமிழிலும் நடத்த வேண்டும் என்று அரசிடம் வலுவாகக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசும் இதன் விளைவை உணர்ந்து நடவடிக்கைகள் எடுத்தால் தமிழ்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முக்கியத் தீர்வு கிடைக்கும்.
சா.கவியரசன், மு.செய்யது இப்ராகிம் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
-நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ் – 30.11.2021