வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி!

கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தைக் காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, “தடுப்பூசி போட மறுக்கும் ஆசிரியர்களால் மாணவர் நலன் பாதிக்கப்படும். சில ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் பள்ளிக்கு வருகிறார்கள்.

இதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இதனால் 47 லட்சம் மாணவர்கள், மக்களின் நலன் கேள்விக்குறியாகி உள்ளது.

லட்சக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் மதத்தைக் காரணம் காட்டி தடுப்பூசி போட ஆசிரியர்கள் சிலர் மறுப்பது ஏற்கத்தக்கதல்ல“ எனக் கூறியுள்ளார்.

You might also like