பிக்பாஸில் கமல் வரும் வாரத்தில் பங்கேற்க முடியுமா?

கமலுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வலைத்தளங்களில் வளைய வரும் கேள்வி ‘பிக் பாஸின்’ நிலை என்ன?’

கமலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

அதனால் அவர் ‘பிக்பாஸில்’ தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

வழக்கமான கமல் இடம்பெறும் சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் ‘பிக் பாஸ்’ தொடரின் ரேட்டிங் அளவு அதிகரிப்பது வழக்கம்.

வரும் வாரத்தில் கமலுக்குப் பதிலாக ஸ்ருதிஹாசனை ‘பிக் பாஸ்’ தொடரில் சனி, ஞாயிறு அன்று இடம் பெறச் செய்யலாமா என்கிற யோசனையும் தொலைக்காட்சிக்கு இருக்கிறது.

அல்லது வேறு ஒரு பிரபலத்தைத் தற்காலிகமாகப் பங்கேற்க வைக்கலாமா என்கிற யோசனையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் இருந்தபடியே, செட்டுக்கு வராமல் காணொளி மூலம் கமலைப் பங்கேற்க வைப்பது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

கொரோனா திடீர் நெருக்கடியை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏற்படுத்தியிருக்கிறது!

You might also like