உத்தரவாதம் அளிக்காமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டோம்!

– விவசாய சங்கங்கள் அறிவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்களை சேர்ந்தோர் டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.

இதனிடையே போராட்டத்தைக் கைவிடுவது குறித்து விளக்கமளித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், “மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவது மட்டும் எங்கள் கோரிக்கையல்ல. குறைந்த பட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் பற்றி எங்களுடன் அரசு பேசி தீர்வு காண வேண்டும். அப்போது தான் போராட்டத்தை கை விட்டு வீடு திரும்புவோம். இல்லாவிடில் வீடு திரும்பமாட்டோம்” எனக் கூறியுள்ளார்.

You might also like