பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துவங்கிப் பலரும் உருவாக்க விரும்பிய திரைப்படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.

நாடகமாகவும் உருவாக்கப்பட்டுப் பெரும் கவனத்தைப் பெற்ற பொன்னியின் செல்வன் படத்தைப் பிரமாண்டமான முறையில் இயக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம்.

விக்ரம், சரத்குமார், கார்த்தி, ஐஸ்வர்யாராய் என்று முன்னணி நட்சத்திரங்கள் பலருடைய பங்களிப்புடன் கொரோனா முடக்கத்தைக் கடந்து உருவாகிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸை பாகுபலிக்கு நிகராக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பின் ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில காட்சிகள் இணைப்புக்காக எடுக்கப்பட இருக்கின்றன. அது முடிந்து ‘டப்பிங்’ மற்றும் இசைக் கோர்ப்பு வேலைகள் நடக்க இருக்கின்றன.

இரண்டு பாகங்களாக பாகுபலி படத்தைப் போலவே வெளியாக இருக்கிற பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2022 ஜூலை மாதத்திற்கு முன்பு வெளியாகும் என்கிறது சினிமா வட்டாரம்.

எப்படியோ திரையரங்குகளுக்குச் ‘செமைத் தீனி’ தயாராகிக் கொண்டிருக்கிறது.

*

You might also like