மதுரையின் மகத்தான ஆளுமைகளின் முன்னோடிகளில் ஒருவர், நாடகக் கலையின் மூத்த கலைஞர் திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளையொட்டிய (நவம்பர் – 13) பதிவு.
நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.
சிறந்த நாடகங்கள் பலவற்றை எழுதியும் அரங்கேற்றம் செய்தும் தாமே நடித்துக் காட்டியும் பிறருக்குப் பயிற்சியளித்தும் நடிக்க வைத்தும் தமிழ் நாடக அரங்கில் ஒரு புத்தொளியை உண்டாக்கியவர்.
தமிழ் நாடக மறுமலர்ச்சி என்பது இவரிடமிருந்து தொடங்குகிறது. இவருடைய வசனங்களும் பாடல்களும் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கும் மட்டுமல்லாது தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியது.
நன்றி: ரோஜா முத்தையா ஆய்வு தூலகம்