நாடு வளர்ச்சி பெற சட்டம், ஒழுங்கு முக்கியம்!

– தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தல்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சர்தார் படேல் தேசிய போலீஸ் அகாடமியில், ஐ.பி.எஸ். பயிற்சி முடித்தவர்களுக்கான விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “நாட்டின் கடலோரப் பகுதிகளில் இருந்து எல்லைப் பகுதிகள் வரை, காவல் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டால், இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் எப்போதும் ஏற்படாது.

மிகப்பெரிய நாடான இந்தியாவில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் கடமை காவல்துறையிடம் தான் உள்ளது.

நாட்டின் உள்பகுதிகளில் மட்டுமின்றி எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கும், நிர்வகிக்கும் பொறுப்பும் காவல்துறைக்கு உள்ளது. நாட்டின் 15 ஆயிரம் கி.மீ., எல்லைப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுடன் உள்ள எல்லைகளில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இவற்றை காவல்துறை தான் நிர்வகிக்க வேண்டும்.

எல்லைப் பாதுகாப்புப் பணியில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

ஜனநாயகம் வலிமையாக இருக்க, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். சட்டங்கள் வலிமையாக இல்லாவிட்டால் எந்த நாடும் வளர்ச்சி பெறாது. அமைதியாக இருக்காது.

மக்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது. உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பாக இல்லையென்றால் எந்த நாடும் முன்னேற்றம் அடையாது” எனக் கூறினார்.

You might also like