நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
“முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்டப்படி தான் தமிழகத்தில் அணையைத் திறந்திருக்கிறோம்.
திறந்தவர்கள் தமிழக அதிகாரிகள் தான். உச்சநீதிமன்றம் மற்றும் ஒன்றிய நீர்வள ஆணையின் வழிகாட்டுதலின் படியே நீரைத் திறந்திருக்கிறோம்.
பேபி அணைப் பகுதியில் இருக்கும் மரங்களை நாங்கள் தேவை கருதி வெட்டச் சொன்னோம். அனுமதி கேட்டோம். அனுமதி கொடுத்தார்கள். அதனால் தான் கேரள அரசுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினார் தமிழ்நாடு முதல்வர். இப்போது அனுமதியை மறுக்கிறார் கேரள வனத்துறை அமைச்சர்.
152 அடி வரை அங்கு நீரைத் தேக்கலாம் என்றிருந்தாலும், 142 அடி வரை தற்போது பராமரிக்கப்படுகிறது. சில எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. உண்ணாவிரதம் இருக்கின்றன. இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை.”