அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் சூழலை உருவாக்க முடியாதா?

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ள பணத்தை அரசு பள்ளிகளின் மேம்பாடு திட்டத்திற்கு பயன்படுத்தினால் அரசு பள்ளி தேடி மாணவர்கள் வருவார்களே!

எந்த இல்லம் தேடி ஆசிரியர்களை அனுப்புவீர்கள்?

தேவையற்ற பிரச்சினைகளுக்கு அது வழிவகுக்கும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட அரசு பள்ளிகளையே மக்கள் அதிகம் நாடுகிறார்கள்.

காரணம் தரம், சிறந்த கட்டமைப்பு, உயர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் என தரத்தை உயர்த்தினால் மக்கள் தானாகவே அரசு பள்ளியை நாடுவார்கள் என்பது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெருமுதலாளித்துவ நாடான அமெரிக்காவிலேயே இது சாத்தியமாகும் போது நம் மாநிலத்தில் ஏன் முயற்சிக்கக் கூடாது?

-ஆதிரன்

You might also like