ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதில் வீர மரணம் அடைந்தோர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் சாதனை புரிந்து விருது பெற்ற பாதுகாப்பு படையினர் பலர் உள்ளனர்.
இவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அங்குள்ள பள்ளிகள், அரசு கட்டடங்கள் மற்றும் சாலைகளுக்குப் பெயர் சூட்ட யூனியன் பிரதேச நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த அதிகாரிகள், “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பள்ளிகள், சாலைகள் மற்றும் கட்டடங்களுக்கு பயங்கரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தோர் மற்றும் வீர தீர செயல்களுக்கான விருது பெற்ற பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் பெயர்கள் விரைவில் சூட்டப்படும்.
மேலும், சாகித்ய அகாடமி போன்ற இலக்கிய விருது பெற்றோர் உள்ளிட்ட 108 நபர்களின் பெயர்கள் இதற்கான பட்டியலில் உள்ளன.
நாடு சுதந்திரம் அடைந்து 75ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினர்.