வழக்கமான அமர்க்களத்துடன் வெளிவந்திருக்கிறது தினகரனின் தீபாவளி மலர்.
கூடவே சிக்கென்று இரண்டு இலவச இணைப்புகள்.
320 பக்கங்களைக் கொண்ட மலரில் ஆன்மிகம், இலக்கியம், ஊர்மணமான கட்டுரைகள், திரைப்படம் என்று பல கலக்கல் அம்சங்கள்.
அதிலிருந்து ஒரே ஒரு சாம்பிள் மட்டும் இங்கே:
தீபாவளிக்கு வெளி வர இருக்கிற ‘அண்ணாத்த’ படத்தைப் பற்றி ஒரு ஸ்பெஷல் கட்டுரை.
அதில் இசையமைத்திருக்கிற இமான் தன்னுடைய அனுபவத்தை இப்படிச் சொல்லியிருக்கிறார்.
“எப்படியாவது இந்த புரொஜெக்ட் நமக்கு வந்துடும்னு பேக்ரவுண்ட்ல சில பேர் ஒர்க் பண்ணுவாங்க. அந்த மாதிரி நான் எப்பவுமே பண்ணினது கிடையாது. ஒரு படம் கூட நானா போய்க் கேட்டதில்ல. என்னைத் தேடி வருவாங்க. அப்படித்தான் எனது படம் தேர்வு இருக்கும்.
டைரக்டர் சிவா உடன் ‘விஸ்வாசம்’ படத்துல ஒர்க் பண்ணினேன். இப்போ ரெண்டாவது முறையா ‘அண்ணாத்த’ல நாங்க சேர்ந்து பண்ணியிருக்கோம்.
பட ஹீரோ உச்ச நடிகர்களா இருந்தாலும், தினமும் நான் சந்திக்கிறது அந்த ஹீரோக்களைக் கிடையாது. இயக்குநர்களைத் தான். அந்த இயக்குநர்களோடு என்னோட கெமிஸ்ட்ரி நல்லா இருந்தாத் தான் எல்லாமே சரியா அமையும்.
அந்த விதத்தில ‘அண்ணாத்த’ படத்துக்காக சிவா சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
‘அண்ணாத்த.. அண்ணாத்த’ ஓபனிங் சாங் 2019-ல ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. அங்கே தான் ரஜினி சாரை முதன் முறையாப் பார்த்தேன். என்னைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார். ‘படையப்பா’ ஓபனிங் பாடலுக்குப் பிறகு இது எனக்கு சரியான பாட்டா அமைஞ்சிருக்கு”ன்னு சொன்னார்..”
இப்படி எவ்வளவோ அம்சங்கள்.. மொத்தமாப் படிக்க மலரை வாங்கிப் பாருங்க..!