லஷ்கர் – இ – தொய்பா, ஜெய்ஷ் – இ – முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு – காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஜம்மு – காஷ்மீரின் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு – காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்கள் பலர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால் பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து விளக்கமளித்த ஜம்மு – காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார், “கடந்த இரண்டு வாரங்களில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள் அக்டோபர் – 13ல் நடத்திய சோதனையில் ஸ்ரீநகரில் ஐந்து பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.