கொரோனா போய் டெங்கு வந்து…!

கொரோனாப் பரவல் இப்போது தான் குறைந்து கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் குறைந்து கொண்டிருக்கின்றன.

மழைக்காலம் துவங்கிவிட்டது. மழைக்காலமும் நோய்களும் துவங்கிவிட்டன. முக்கியமாக டெங்குவின் பாதிப்பு மறுபடியும் அதிகமாகி இருக்கிறது. புது டெல்லியில் பல இடங்களில் டெங்கு குறித்த எச்சரிக்கை போர்டுகள். டெங்குவுக்கென்று தனியாகச் சிறப்பு வார்டுகள்.

முன்னாள் பிரதமர் மன்மோன்சிங் டெங்குவினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு பாதிப்பு அதிகமாகத் தமிழகத்தில் பரவியிருந்தபோது நிலவேம்புக் குடிநீரை தமிழக அரசு பரிந்துரை செய்தது நினைவிருக்கலாம்.

தற்போது தமிழகத்தில் மீண்டும் டெங்கு பரவிக் கொண்டிருக்கிறது. 3187 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது தமிழக அரசு. சுமார் முந்நூறு பேர் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறார்கள்.

நம்முடைய மருத்துவ மரபில் வந்த நிலவேம்புக் குடிநீரின் அவசியத்தை மறுபடியும் நாம் உணர வேண்டியிருக்கிறது.

You might also like