இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: அங்கீகரித்த 30 நாடுகள்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி சான்றிதழ்கள் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தன.

இதனால் தொழில் சார்பாக வெளிநாடு செல்பவர்கள், படிப்பு தொடர்பாக வெளிநாடு செல்பவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் இந்திய அரசு பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு பரஸ்பர அங்கீகாரம் வழங்க இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், அர்மெனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like