சென்னை கண்ணகி நகரில் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது. மாநிலம் முழுதும் இரு குழந்தைகள் உட்பட 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்; தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கொரோனாவால் உயிரிழந்த 4 டாக்டர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இதர காரணங்களால் உயிரிழந்தவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க 400 கோடி ரூபாய்செலவிட நேரிடும்.
கொரோனாவால் உண்மையாக பாதித்து உயிரிழந்தவர்களை கண்டறியும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும்; தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும்” எனக் கூறினார்.