18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி!

ஒன்றிய நிபுணர் குழு பரிந்துரை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 96 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அக்டோபர் இறுதியில் கொரோனா 3வது அலை தாக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அதோடு, பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

இதனால் விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. செப்டம்பரில் குழந்தைகளுக்கான தடுப்பூசி அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு ஏற்கனவே கூறி உள்ளது.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என ஒன்றிய அரசின் நிபுணர் குழு நேற்று பரிந்துரை செய்துள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது

You might also like