தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1956 ஆம் ஆண்டே அமல்படுத்தப்பட்டாலும் அதைத் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே “தமிழக அரசின் பணியாளர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும்” என்று ஆணையைப் பிறப்பித்தார் எம்.ஜி.ஆர்.
ஆணையிட்ட நாள் 21.06.1978.
அதோடு பெயருக்கு முன்னால் உள்ள ”இனிஷியல்“ என்கிற தலைப்பெழுத்துகளும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்கிற ஆணையும் வெளியிடப்பட்டது.
அரசுத் துறைகளுக்குள் பதிவேடுகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதற்கான ஆணையும் 1986-ல் பிறப்பிக்கப்பட்டது.
மாவட்டம் தோறும் ஆட்சி மொழிக் கருத்தரங்குகள் நடத்தப்படவும் தனி ஆணை போடப்பட்டது.
எம்.ஜி.ஆரும் தன் கையெழுத்தைத் தமிழில் தான் இறுதி வரை பதிவிட்டிருக்கிறார்.