உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு அனுமதி!

மலேரியா நோயைத் தடுப்பதற்காக மஸ்க்கியூரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் என்ற நிறுவனம் 1987ம் ஆண்டு உருவாக்கியது.

இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டு கானா, கென்யா ஆகிய நாடுகளில் சுமார் 8 லட்சம் சிறார்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மஸ்க்கியூரிக்ஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

மஸ்க்கியூரிக்ஸ் மலேரியா தடுப்பூசிக்கு தற்போது தான் உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே கென்யாவில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

இதனிடையே மலேரியா தாக்குதலுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர்.

You might also like