கொரோனா தடுப்பூசி போட்டபின் காய்ச்சல் வரலாமா?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பயம் தற்போது பலருக்கும் தெளிந்திருக்கிறது. அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களில் திரளாகப் பலரும் வந்து தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்கிறார்கள்.

இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு பலருக்கும் இருக்கும் கேள்வி;

ஏன் தடுப்பூசி போடப்பட்ட பிறகு காய்ச்சலும், உடல் வலியும் வருகின்றன?

இதற்கு மருத்துவத் தரப்பில் சொல்லப்படும் விளக்கம் என்ன?

  • இரண்டு தடவை தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நோய்த்தடுப்பாற்றல் அதிகரிக்கும்.
  • அப்படித் தடுப்பூசி போடும்போது தடுப்பு மருந்து உடலுக்குள் செல்லும் போது உடல் அதற்கேற்றபடி எதிர்வினை ஆற்றும். அதனால் தான் காய்ச்சலோ, உடல் வலியோ, தலை வலியோ வருகின்றன. உடல் தகுந்த எதிர்வினை ஆற்றும்போது, தான் நோய்த்தடுப்பு ஆற்றல் அதிகரிப்பதை ஒருவர் உணர முடியும்.
  • எதிர்வினை அந்தந்த நபர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. அதே மாதிரி தடுப்பூசி போடப்படும் எல்லோருக்குமே காய்ச்சலும், வேறு சில அறிகுறிகளும் வரும் என்று சொல்ல முடியாது.
  • சிலருக்கு முதல் தவணைத் தடுப்பூசி போடும்போது, உடல் எதிர்வினை ஆற்றலாம். சிலருக்கு இரண்டாவது தவணைத் தடுப்பூசி போடும்போது ஆற்றலாம். சிலருக்கு இரண்டு தவணைகளிலும் எதிர்வினை இருக்கலாம்.
  • இந்த எதிர்வினைகளைப் பொருட்படுத்தி தடுப்பூசி செலுத்தவே யாரும் தயங்க வேண்டியதில்லை. முதல் தவணைத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட சுமார் இருபது லட்சம் பேர் இரண்டாவது தவணைத் தடுப்பூசியைத் தமிழ்நாட்டில் எடுக்காமல் இருப்பது- தடுப்பூசி எதிர்வினை தொடர்பான குழப்பம் மக்களிடம் இன்னும் இருப்பதையே வெளிக்காட்டுகிறது.
  • தமிழ்நாட்டில் இதுவரை 75 கோடிப்பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கான எதிர்வினைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
You might also like