– ஜெய்ப்பூர் நீதிமன்றம் அதிரடி
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த 26-ம் தேதி இரவு, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அடுத்த நாள் கமலேஷ் மீனா என்பவரை கைது செய்தனர்.
குற்றத்தின் தன்மை கருதி தீவிரமாக செயல்பட்ட காவல்துறையினர், இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தயார் செய்தனர்.
வழக்கு பதிவு செய்த 18 மணி நேரத்தில் ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நீதிமன்றமும் வழக்கு விசாரணையை உடனடியாகத் துவங்கியது. ஆதாரங்கள் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றம் செயல்பட்ட ஐந்து நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியை பலாத்காரம் செய்த கமலேஷ் மீனாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட ஒன்பது நாட்களில் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது, பல்வேறு தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.