கொரோனா தடுப்பூசி போடாத 90 % பேர் மரணம்!

-அரசு வெளியிட்ட ஆய்வில் தகவல்

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 33,575 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் 23 ஆயிரத்து 827 பேர் அதாவது 70.97% தடுப்பூசி செலுத்தாதவர்கள்.

முதல் டோஸ் மட்டும் தடுப்பூசி செலுத்தியவர்கள் 6,020 பேர் அதாவது 17.93% பேர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3,728 பேர் அதாவது 11.1% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டவர்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனை ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் 2,915 பேர். இவர்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 2,161 அதாவது 74.14% பேர்.

முதல் டோஸ் மட்டும் தடுப்பூசி செலுத்தி ஐசியு பிரிவில் சிகிச்சைப் பெற்றவர்கள் 510 அதாவது 17.49%. இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் 244 பேர் அதாவது 8.37% பேர் ஆவர்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33 ஆயிரத்து 575 பேரில் 1,268 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் தகவல்களை ஆய்வு செய்த போது இவர்களில் 1,129 அதாவது 89.04% தடுப்பூசியே செலுத்திக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 94 பேர் அதாவது 7.41% ஆகும். இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 45 பேர் அதாவது 3.55 சதவிகிதம் என்பது தெரியவந்துள்ளது.

You might also like