சிந்தனை செய் மனமே…!

சிந்தனை செய் மனமே…
சிந்தனை செய் மனமே தினமே….

சிந்தனை செய் மனமே…
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை

(சிந்தனை…)

செந்தமிழ்க்கருள் ஞானதேசிகனை செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை

(சிந்தனை…)

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க நெறி தனை மறந்தனை
அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமறை பரவிய சரவண பவ குகனை

(சிந்தனை…)

வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால்
சந்தமும் கந்தனைப் பாட

நடராஜன் அருள் பாலன்
நான்மறை தொழும் சீலன்
தடம் மேவும் பொழில் சூழும்
தணிகை வாழும் பரமஞான குருபரன்

தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
ஜப மாலையுடன்
சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான்
தாப மிகு வெப்பு வாதமொடு
பித்தமான பிணி மொய்த்து உடம்போடு

சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
தாளையளித்திட வேணுமெனத் துதி
பாடருணைகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து

முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த

சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட
துவர் கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே

(சிந்தனை…)

– 1957-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த  ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கே.டி.சந்தனம்

You might also like