உச்சநீதிமன்றம் கண்டனம்
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி, தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பட்டாசு தொழிற்சாலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய ஆய்வின் முதற்கட்ட அறிக்கை குறித்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், “பெரும்பாலான பட்டாசுகளில் தடைசெய்யப்பட்ட பேரியம் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பது சி.பி.ஐ. ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ரசாயனத்தைத் தடை செய்து, 2019-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி பேரியத்தைப் பயன்படுத்திய உற்பத்தியாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்ய கூடாது?
இந்த விவகாரத்தில் இன்னும் ஆறு வார காலத்தில் முழுமையான அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும். முதல்கட்ட ஆய்வறிக்கையின் நகல், பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.