காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் எஸ்.கே.ஹல்தர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பதினான்காவது கூட்டம் நேற்று டெல்லியில் ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.