கண்ணகி எரிப்பே கடைசியாக இருக்கட்டும்!

– கடலூர் கவுரவக் கொலை வழக்கில் நீதிபதி தீர்ப்பு

கடந்த 2003-ல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், கண்ணகி ஆகியோர் கவுரவக் கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. சம்பவம் நடைபெற்று 18 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி உத்தமராசா, “குற்றம் சாட்டப்பட்டவர்கள், முருகேசனின் உறவினர் அய்யாசாமியை கயிற்றில் கட்டி, தலைகீழாக கிணற்றில் தொங்கவிட்டு, கொடூரச் செயலுக்கு உடந்தையாக செயல்படுத்தியுள்ளனர்.

சாதிய கவுரவத்துக்காக மனித சமூகத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இக்கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ் மண்ணில் கண்ணகி எரித்துக் கொலை செய்யப்பட்டதே கடைசியாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

You might also like