திருப்புமுனையான திருச்சி தி.மு.க மாநாடு!
பரண்:
1957. மே மாதம் 17 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை திருச்சியில் தி.மு.க மாநாடு. அந்த மாநாட்டில் தான் நாவலரை இப்படி அழைத்தார் அண்ணா.
“தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லோரும் கட்டுப்பட்டு நடப்போம்! தலைமையேற்று நடத்த வா”
“தி.மு.க தேர்தலில் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்” என்றார் அண்ணா. மாநாட்டில் வாக்கெடுப்பு நடந்தது.
வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் அறுபதாயிரம் பேர். தி.மு.க தேர்தலில் கலந்து கொள்ள வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 57 ஆயிரம் பேர். கலந்து கொள்ள வேண்டாம் என்று வாக்களித்தவர்கள் 3 ஆயிரம் பேர்.
இதையடுத்து “இனி தேர்தலில் தி.மு.க பங்கெடுக்கும்” என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி 1957 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டது தி.மு.க. அதற்குக் கிடைத்தவை 15 சட்டமன்றத் தொகுதிகள். 2 நாடாளுமன்றத் தொகுதிகள்.
1959-ல் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க 45 இடங்களைப் பிடித்து மேயர் பதவியைக் கைப்பற்றியது.
09.03.2021 03 : 50 P.M