அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் இந்தியர்கள்!
செவ்வாய் கிரகத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாசா விஞ்ஞானிகள் குழுவினரோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.
காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது பேசிய ஜோ பைடன், “மக்கள் பணிக்கு அதிக எண்ணிக்கையில் இந்திய – அமெரிக்கர்கள் வருவது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
தெற்கு ஆசியாவைச் சேர்ந்த அதிகம் பேர் மக்கள் பணியில் ஈடுபட்டிருப்பது, மேலும் பல தெற்கு ஆசியர்களை பொதுப்பணிக்கு நேராக வழிநடத்தும் என்பதில் ஐயம் இல்லை” என இந்திய, அமெரிக்கர்களை வெகுவாகப் புகழ்ந்தார்.
அதன்பின் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியதில் முக்கிய பொறுப்பு வகித்த அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்வாதி மோகன், வினய் ரெட்டி உள்ளிட்டோரைக் குறிப்பிட்டு பேசினார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற 50 நாட்களுக்குள் பிடன் தனது நிர்வாகத்தில் உள்ள முக்கிய துறைகளில் 55 இந்திய – அமெரிக்கர்களை பணியில் அமர்த்தினார். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
05.03.2021 05 : 20 P.M.