தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது பற்றி அரசுக்குக் கவலையில்லை!

மதுரையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பள்ளிக்கூடம், குடியிருப்புப் பகுதி அருகே மதுபானக் கடை வைப்பதற்கு மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துங்கள்.

மதுவிலக்கால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும் குடிமகன்களின் உடல்நிலை ஆரோக்கியமடையும்.

நீதிமன்றங்களின் யோசனையை தமிழக அரசு கவனிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளது.

16.02.2021 02 : 22 P.M

You might also like