நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படக் கூடாது!

ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவுக்கு ராஜீவ்காந்தி எழுதிய கடிதம்.

தனது பாதுகாப்புக்காகவும் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவின் தலையீடு இலங்கையில் இருக்கக் கூடாது என்பதற்காகவுமே அந்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட நேர்ந்தது. இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவும் ராஜீவ் காந்தியும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கினர். இது தொடர்பாக உருவான பதற்றநிலையை இக்கடிதம் வெளிப்படுத்துகிறது.

                                                              ஜூலை 29,1987, புதுடெல்லி.

மேதகு ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவுக்கு வணக்கம்.

உங்களது ஜுலை 29, 1987 தேதியிட்ட கடிதத்தில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

  1. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவை உணர்ந்து அதைப் பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் முன்னிட்டு, இரு நாட்டுப் பிராந்தியங்களிலும் மற்ற நாடுகள் நுழைந்து மற்ற நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பைப் பாதிக்காமல் இருக்க வேண்டியது முக்கியமானது.
  2. இந்த உணர்வுடன் நமது பேச்சு வார்த்தையின் முடிவில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான சில அம்சங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.அ) இலங்கையில் அயல்நாட்டு ராணுவம் மற்றும் உளவுத் துறையினர் இருப்பது, இந்திய – இலங்கை உறவைப் பாதிக்காது என்பதைப் பேசியுள்ளோம்.ஆ) திரிகோணமலை மற்றும் இலங்கையில் உள்ள மற்ற துறைமுகங்களில் மற்ற நாடுகளின் ராணுவப் பயன்பாடு இந்திய நலனுக்குப் பாதகமாக இருக்கக் கூடாது.

    இ) திரிகோணமலை எண்ணெய்க் கிடங்கைப் பயன்படுத்துவது மற்றும் சரிசெய்யும் வேலையை இந்தியா மற்றும் இலங்கைத் தரப்பினர் மட்டுமே செய்ய வேண்டும்.

    ஈ) இலங்கையில் வெளிநாட்டு செய்தி ஒலி, ஒளிபரப்பு நிறுவனங்கள் பொதுசேவையை மட்டுமே செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ராணுவ அல்லது உளவுத் துறையினர் தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது.

    3.அதேபோல இந்தியாவும் சில நடவடிக்கைகளுக்கு சம்மதிக்கிறது.

    அ) தீவிரவாதச் செயல்கள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை குடிமக்களை வெளியேற்றுவோம்.

    ஆ. பயிற்சி வசதிகள் மற்றும் ராணுவக் கருவிகளை இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இந்தியா வழங்கும்.

    4. முதல் பாராவில் குறிப்பிட்டபடி இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த கலந்தாய்வுக் குழுவை அமைத்து பொதுவான பிரச்சனைகளைப் பகிரந்துகொள்ளும்.

    5. நமது ஒப்பந்தத்தை இந்த அம்சங்கள் விளக்குகின்றனவா என்பதை நீங்கள் உறுதி செய்யவும்.

உங்களது உண்மையுள்ள,

ராஜீவ்காந்தி

  • நன்றி ‘த சண்டே இந்தியன்’ 28 நவம்பர் 2010

11.02.2021 12 : 50 P.M

You might also like