எம்.ஜி.ஆர் இல்லத்தை அரசு அங்கீகரித்த நினைவில்லமாக மாற்ற வேண்டும்!

பெங்களூருவில் இருந்து திருமதி சசிகலா தமிழகம் வந்து சேர்ந்திருக்கும் நிலையில், ‘எம்.ஜி.ஆர் புரட்சி சங்கம்’ சார்பில் அதன் மாநிலச் செயலாளர் மோதிர சண்முகம் முன்வைக்கும் சில கோரிக்கைகள்.

  1. அதிமுக சார்பில் வைக்கப்படும் போஸ்டர்கள், பேனர்களில் மற்ற தலைவர்களின் படங்களைவிட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகைப்படம் பெரிதாக இருக்க வேண்டும்.
  2. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்திற்கு ‘ஜானகி எம்.ஜி.ஆர் வளாகம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
  3. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான ஜனவரி – 17 ஆம் தேதியை ‘பொன்மனச் செம்மல்’ தினமாகக் கொண்டாட வேண்டும்.
  4. ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு மக்கள் தொண்டனாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்மாட்டி வைக்கப்பட வேண்டும்.
  5. ஜானகி அம்மாவின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாவும் வாழ்ந்த ராமாபுரம் இல்லத்தை முழுமையாக சீரமைத்து, இன்னும் மேம்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7. சென்னை தியாகராய நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எம்.ஜி.ஆர் நினைவில்லத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசு நினைவில்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

08.02.2021 12 : 50 P.M

You might also like