“நாம் நாத்திகர்களும் இல்லை; ஆத்திகர்களும் இல்லை” – அண்ணா!
பரண்:
“நாம் நாத்திகர்களுமல்ல; ஆத்திகர்களுமல்ல. பகுத்தறிவுவாதிகள். அறிவுக்குப் பொருந்தும் எந்தச் செயலும் உலகத்துக்கும் பொருந்துவதாகக் காணப்படும்பொழுது அந்தச் செயலையே நாம் மேற்கொள்கிறோம்.
நமக்குச் சரியெனப்பட்டது ஒன்று, மற்றவர்களுக்குத் தப்பெனப்படுவதைக் காணும்பொழுது நாம் அதைப்பற்றிச் சிந்திக்கிறோம். சிந்திக்கும் அவகாசத்தை மற்றவர்களுக்கு அளிக்கிறோம்.
அதாவது நாம் எதனையும் ஒருவரின் நிர்பந்தத்தின் காரணமாக ஏற்றுக் கொள்வதுமில்லை; மற்றவர்களை நிர்பந்தித்து ஏற்றுக் கொள்ளும்படி செய்வதுமில்லை.
இந்த அடிப்படையில் தான், நாம் நமது பகுத்தறிவுப் பாதையினைச் செப்பனிட்டு வருகின்றோமே ஒழிய, நாம் நாத்திகர்கள் என்று கூறிக் கொண்டோ, ஆத்திகர்கள் என்று கூறிக் கொண்டோ எந்தக் காரியத்தையும் செய்ததில்லை. செய்யவும் மாட்டோம்”
-1954 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று வடஆற்காட்டில் நடைபெற்ற சமூகச் சீர்திருத்த மாநாட்டில் அறிஞர் அண்ணா பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.
03.12.2021 11 : 10 A.M