சத்துமிக்க தினை மாவு பூாி!
கோதுமை மாவில் பூரி செய்வது வழக்கம். சற்று வித்தியாசமாக தினை மாவு கொண்டு செய்யப்படும் பூரி சுவை மிகுந்ததாகவும், சத்து மிக்கதாகவும் இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்த தினை மாவு பூரி செய்யும் முறையைப் பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தினை மாவு (தினை) – 2 கப்
உருளைக் கிழங்கு – 2
கொத்தமல்லி – தேவைக்கேற்ப
இஞ்சி, பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு ஏற்ற அளவு
உப்பு – தேவையான அளவு
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
உருளைக் கிழங்கை வேக வைத்து பின்னா் தோலை உரித்து வைத்து கொள்ளவும்.
அதை நன்றாக பிசைந்து, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, உப்பு, நெய் இவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
அதனுடன் தினை மாவையும் சேர்த்து, உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரைக் கொண்டு பூரி பதத்திற்கு மாவை பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து சிறு உருண்டைகளாக மாவை உருட்டி வைக்கவும்.
பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சில நிமிடங்கள் வரை சூடுபடுத்த வேண்டும்.
தினை மாவு உருண்டைகளை பூரி மாதிரி தேய்த்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்க வேண்டும். பூரியின் விளம்புகள் மொறு மொறுவென வரும் வரை பொரித்து எடுத்து பொருத்தமான சைடிஸ் உடன் பாிமாறலாம்.
ஆரோக்கியம் நிறைந்த இந்தத் தினை மாவு பூாியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாா்கள்.
22.01.2021 04 : 34 P.M