பனியால் மூடிய சஹாரா பாலைவனம்!

ஜோர்டான் எல்லைக்கு அருகில் ஜனவரியில் எப்போதும்போல வழக்கமான பருவநிலையைப் பார்க்க முடியவில்லை. அல்ஜீரியாவுக்கு அருகில் உள்ள ஐன்செஃப்ரா என்ற நகரத்தில் பாலைவனம் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது.

வடக்கு ஆப்பிரிக்காவில்தான் சஹாரா பாலைவனத்தின் பெரும்பகுதி இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஜனவரியில் உலகின் பல பகுதிகளில் பனியும் குளிரும் நிறைந்திருக்கும். ஆனால் இந்த வெப்ப மயமான சஹாரா பாலைவன மண்ணில் பனியைப் பார்ப்பது அதிசயம்தான். அது உண்மையில் நடந்திருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வெப்பநிலை உறைபனிக்குக் கீழே குறைந்து, அங்கே  வியக்கத்தக்க அளவில் பனியைப் பெற்றுள்ளன.

ஒரு புகைப்படக் கலைஞர் பாலைவன மண்ணில் உறைந்துள்ள பனியை அழகிய காட்சிகளாக கேமராவில் பதிவுசெய்துள்ளார். நாம் இதுவரை பார்க்காத அற்புதங்களாக அவை இருக்கின்றன. செளதி அரேபியாவின் தபூக் வட்டாரத்தில் ஒட்டகங்கள் பனிப்பொழிவில் வித்தியாசமாகத் தோற்றம் தருகின்றன.

பாலைவன தேசத்தில் மக்கள் வறண்ட பருவநிலையில் இந்த அசாதாரண திருப்புமுனையை எதிர்கொண்டுள்ளனர். இந்த வெப்பமான சூழலிலும்கூட அவர்கள் பனிப்பொழிவையும் குளிரையும் சந்தித்து வருகின்றனர்.

சிறிய சஹாரா பாலைவன நகரத்தில் பனியழகை புகைப்படக் கலைஞர் கரிம் பெளசேடாட்டா ரசனையுடன் நம்பமுடியாத படங்களை எடுத்திருக்கிறார்.

வெப்பநிலை மிகவும் குறைந்ததால், செம்மறி ஆடுகள் பனிமூடிய குன்றுகளில் நின்றுகொண்டிருந்தன.

ஐன் செஃப்ரா நகரம் சஹாரா பாலைவனத்தின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. அது கடல்மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. அது அட்லஸ் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

-தான்யா

20.01.2021  12 : 30 P.M

You might also like