நாளையுடன் நிறைவடைகிறது வடகிழக்குப் பருவமழை!
வடகிழக்குப் பருவமழை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது குமரிக்கடல் வரை நீடிக்கிறது.
இதன்காரணமாக தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். வரும் 19-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முடிவுக்கு வரும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18.01.2021 04 : 55 P.M