மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் இலவசமாக பயணிக்கலாம்!

கொரோனா தளர்வுக்குப் பின் தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 11,600 பள்ளிகளில் 10-ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், 12-ம் வகுப்பில் 8 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 18 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு சில விதிமுறைகள் கடைபிடிக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து சாப்பிடக் கூடாது. விளையாட்டுப் பிரிவு கிடையாது. மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பழக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்க சுகாதாரத் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மாணவர்களுக்கு புதிய ‘பஸ் பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்’ என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

18.01.2021  12 : 30 P.M

You might also like