திரையரங்குகளில் 100 % இருக்கைகளை அனுமதிப்பது முறையா?
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என கடந்த அக்டோபரில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்பின் சமீபத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என கடந்த 4-ம் தேதி தலைமைச் செயலர் உத்தரவிட்டதையடுத்து, இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் 100 % இருக்கைகளை அனுமதிப்பது முறையா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் தியேட்டர்கள் விவகாரத்தில் குழந்தைகள் போல அரசு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டும் எனவும், வரும் 11-ம் தேதி வரை 50% இருக்கைகளுக்கு அனுமதியளிக்கும் நிலையே தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், “100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கல்களுக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், விரிவான அறிக்கை பெற்று தாக்கல் செய்ய வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
08.01.2021 03 : 05 P.M