புத்தாண்டு: நியூசிலாந்து முதல் சிங்கப்பூர் வரை

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள் லேசாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். புத்தண்டை நியூசிலாந்து முதல் சிங்கப்பூர் வரை மக்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதைக் கண்கவர் புகைப்படங்கள் வழியாகப் பார்க்கலாம்.

தாய்லாந்து

பாங்காக் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் மக்கள் அமைதியாக அமர்ந்து  நீரூற்றை ரசிக்கிறார்கள்.

நியூசிலாந்து

ஸ்கை டவரில் இருந்து வண்ண வெடிகளை வெடித்து மகிழ்கிறார்கள். நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு வரவேற்கும் ஒளிவெள்ளம்.

ஆஸ்திரேலியா

சிட்னி நகரில் உள்ள ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பாலத்தின் காட்சி. மின் விளக்கு அலங்காரங்கள் மற்றும் வானவேடிக்கைகளால் ஜொலிக்கிறது. புதிய ஆண்டு வெளிச்சத்தில் தெரிகிறது.

சீனா

புத்தாண்டு தினத்தன்று கொரோனாவின் பூர்வீக நகரமான வுகானில் ஒளிக்காட்சிகள் வானுயர கட்டடங்களில் காட்டப்படுகின்றன.

சிங்கப்பூர்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மெர்லியன் சிலை வண்ண விளக்குகளால் மிளிர்வதை மக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.

ஜப்பான்

டோக்கியோ நகரில் உள்ள சென்சோஜித் கோயிலுக்குச் சென்று புத்தாண்டு வரவேற்று வணங்கும் ஜப்பானியர்கள்.

தென்கொரியா

புத்தாண்டின் தொடக்கமாக சியோலில் உள்ள பரபரப்பான ஷாப்பிங் பகுதியில் ஆர்வத்துடன் வருகைதரும் மக்கள்.

-தான்யா

02.01.2021 11 : 50 A.M

You might also like