என்ன தல? இந்த முறை அடி கொஞ்சம் பலமோ?

1979 ஜனவரி மாதம் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அயாதுல்லா கொமேனி ஆட்சியைப் பிடித்தார். மன்னர் ஷா, ஈரானை விட்டு தப்பியோடினார்.

ஈரானின் உச்சபட்சத் தலைவரா டிரம்ப்?

செய்தி: அயத்துல்லா அலி காமேனி இறப்புக்கு பின்னர் ஈரானின் புதிய உச்சபட்சத் தலைவராக தலைமை ஏற்கும் அழைப்பை நிராகரித்தேன்! – அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு. கோவிந்த் கமெண்ட்: ஈரான் மீது பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கித் தலைமைப் பொறுப்பு வகித்தவர்களை இஸ்ரேலுடன் சேர்த்து உயிரிழக்க வைத்து, அந்த நாட்டையே சீரழித்த டிரம்ப்பை உச்சபட்சத் தலைவராக யாராவது அழைப்பார்களா என்ன? டிரம்ப் காணும் சர்வதேசக் கனவுகளில் இதுவும் ஒன்று போலிருக்கிறது.

கச்சா எண்ணெய் கையிருப்பும் உயரும் விலையும்!

செய்தி: 8 லட்சம் டன் எல்பிஜி உடன் 74 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. – தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை. கோவிந்த் கமெண்ட்: கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதாக சொல்வதெல்லாம் ஆறுதலளிக்கக் கூடிய விஷயம் தான். அதே சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையும், சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது, யாருடைய கையிருப்பில் இருக்கிறது?

போரைத் துவக்கி விட்டு, சாவகாசமாக சமாதானமா?

மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டம்: ஏற்க மறுத்து கடும் நிபந்தனைகள் விதித்தது ஈரான்.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…!

செய்தி: இனி வருவது சோதனையான காலம்; மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும்! மேற்காசிய போர் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு. கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போரின் விளைவாக உருவான நெருக்கடியை முன்வைத்து, பிரதமரான மோடியே சோதனை என்று பேசுகிறார் என்றால், போருக்கு சிறிதும் சம்பந்தமில்லாத போர் குறித்த செய்திகளை பீதியுடன் பார்த்தோ, படித்தோ அரண்டு போயிருக்கும் சாதாரண குடிமக்கள் என்னென்ன சோதனைகளைத் தான் தாங்க முடியும்.

எது பயனுள்ள பேச்சுவார்த்தை?

செய்தி: பயனுள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ஈரானின் மின்நிலையங்களை 5 நாட்களுக்குத் தாக்க மாட்டோம்.   – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.   கோவிந்த் கமெண்ட்: டிரம்ப் இன்றைக்கு சொல்கிற பயனுள்ள பேச்சுவார்த்தையை அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து முதலில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பே யோசித்து செயல்படுத்தி இருக்கலாமே?   தற்போது, போர் வலுத்து வரும் நிலையில், போரைத் தூண்டி விடுகிற மாதிரியான செயல்பாடுகள் ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் இத்தகைய பயனுள்ள பேச்சுவார்த்தை நடக்க […]