பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பொம்மை உற்பத்தி!

ஸ்டார்ட் அப் துறையில், தங்களின் புத்தாக்க சிந்தனை மூலம், இளைஞர்கள் பலரும் புதிய பயணத்தைத் துவங்குகின்றனர். வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் தங்களின் வணிகச் செயல்பாடுகள் மூலம் சமூகப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயலும் புதிய தலைமுறை படைப்பாளிகளாக இவர்கள் உள்ளனர். இத்தகைய ஒரு சுற்றுச்சூழல் தொழில் முனைவோர் தான் ஆரிரரோ டாய்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வசந்த் – நிஷா தம்பதியினர். இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் பிறந்தது முதலே மின்னணு சாதனங்களுடன் உறவாடத் தொடங்குகின்றனர். […]

தமிழர்களின் திருவிழாவா தீபாவளி?

தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை.

சுனாமி பேராபத்தைத் தவிர்க்க விழிப்புணர்வே ஒரே வழி!

சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை. ஜப்பான் மொழியில் சு (Tsu) என்றால் துறைமுகம் (Harbour). நாமி (nami) என்றால் அலையை (wave) குறிக்கும். சுனாமி என்றால் “துறைமுக அலை” என்று பொருள். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உள்ளன. தமிழில் “ஆழிப்பேரலை” என்று அழைக்கப்படுகிறது. ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா” அல்லது “அலோன் புலூக்” என்று அழைப்பர். “அலோன்” என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை” என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா […]

இல்லத்தரசிகளின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம்!

இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்து தங்களுடைய இல்லத்தை கோயிலாக மாற்றும் இல்லத்தரசிகளுக்கான தினம் இன்று. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3ம் தேதி தேசிய இல்லத்தரசி தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளையும், வீட்டையும் நன்கு கவனித்துக்கொள்ளும் அம்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இல்லத்தரசி தினம் முதலில் கொண்டாடப்பட்ட சரியான தேதி தெளிவாக இல்லை. ஆனால், கடின உழைப்புக்கு மதிப்பளிக்கப்படாத ஒரு இல்லத்தரசியால் இந்த நாள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று […]

சங்கடப்படாமல் சாப்பிட ‘சாண்ட்விச்’ இருக்கு!

இந்த தலைப்பைப் படித்ததும், சாண்ட்விச் கடைக்கான விளம்பரமா இது என்று நினைத்துவிடக் கூடாது. இன்றைய தேதிக்கு, ’இதுதான் சாண்ட்விச்’ என்று எவருக்கும் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. பானிபூரி, மசாலா பூரி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தால், குழந்தைகளே கூட ‘முதல்ல சாண்ட்விச் ஆர்டர் பண்ணுங்க’ என்று சொல்லிவிடுகின்றனர். அப்படிப்பட்ட சாண்ட்விச்சின் வரலாறு என்ன என்று தேடிப் பார்த்தால் தலை சுற்றுகிறது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்த பூமியில் சாண்ட்விச் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதன் ஒட்டுமொத்தக் […]

சாக்லேட்டை கடவுளின் உணவாகக் கருதிய மக்கள்!

உலகெங்கிலும் உள்ள மக்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும், கொண்டாட்டங்களின் அடையாளமாகவும், குழந்தைகளின் குதூகலத்திற்கு காரணமாகவும் விளங்கும், சுவையான இனிப்பு பண்டம் தான் சாக்லேட். அன்பைப் பகிரவும், உறவுகளைப் பேணவும், தற்கால தலைமுறையினர் அதிகம் உபயோகிக்கும் பொருளாகவும் இது உள்ளது. சாக்லேட் என்ற வார்த்தை ஆஸ்டெக் மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு கசப்பான நீர் என்று பொருள். முதன்முதலில் ஆஸ்டெக் நாகரீக மக்கள், கோகோ மற்றும் தண்ணீரை பயன்படுத்தி ஒரு கசப்பான பானமாகவே இதனை அருந்தினர். இதைக் கடவுளின் உணவு […]