கலாமின் கனவை நிறைவேற்றும் விவேக் மனைவி!
முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீதான ஈர்ப்பால் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், அவரது பெயரில் நலத்திட்டங்களைச் செய்வது, அவரது நினைவாக மரக்கன்றுகளை நடுவது என வாழ்ந்து வந்தார். அவரது மறைவிற்குப் பிறகு நடிகர் விவேக்கின் மனைவி திருமதி. அருள்செல்வி அந்தப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 95-வது பிறந்தநாளையொட்டி (15.10.2026), சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனை […]
ஒவ்வொரு விடியலும் இன்னொரு வாய்ப்பு!
தாய் சிலேட்: நீங்கள் எழுந்திருக்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் கதையை மாற்ற இன்னொரு வாய்ப்பு! – மெல் ராபின்ஸ்
அதிமுக துவக்க நாளில் தொண்டர்களுக்கு ஒரு செய்தி!
அக்டோபர் 17 – அதிமுக என்கின்ற மகத்தான பொன்விழா கண்ட இயக்கம் துவக்கப்பட்ட நாள். இதே நாளில் மிக எளிமையாக ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் துவக்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் நம் நினைவுகளில் ஐக்கியமாகி 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனாலும் இன்னும் அவரைப் பற்றிய நினைவு மட்டும் பலரிடம் உயிரோட்டமாக இருக்கிறது. அதிமுக என்கின்ற இயக்கத்தை நிறுவிய எம்.ஜி.ஆரைப் பற்றிய மிக அபூர்வமான ஆவணம் உருவாக்கப்பட்டு அழகான வடிவமைப்பில் […]
வீட்டுக்குள் உஷார்..!
ஊர் சுற்றிக் குறிப்புகள்: எல்நினோ தட்பவெப்ப மாற்றம் இப்படியெல்லாம் மாறுதலை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், நம்மைச் சுற்றி பல மாற்றங்கள் விசித்திரமாக நடந்துகொண்டிருக்கின்றன. முன்பு எப்போதும் இல்லாத விதத்தில், யானைகள் சர்வசாதாரணமாக நடந்து போகின்றன. சென்றவாரம் மலைப்பகுதியில் டூரிஸ்ட்களை பீதியடையவைத்தபடி அதற்கே உரிய இயல்போடு, புலி ஒன்று கடந்து போயிருக்கிறது. மலையோரத்தில் வசிப்போரின் வீடுகளில் தேள்கள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கின்றன. தெருவில் திரியும் நாய்கள் திடீர் திடீரென்று சுறுசுறுப்பாகி மெதுவாக நடந்துபோகிறவர்களெல்லாம், பதற வைத்து […]
ஏழ்மையே இல்லாத நாள் என்று வரும்?
அக்டோபர் – 17 : இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை…. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும், அதற்கு கீழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி நினைப்பதில்லை.. யாரும் விரும்பாத வறுமை வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் […]
எம்.ஜி.ஆருக்குப் பின்னால் நின்ற தொண்டர்கள்!
1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும். தலைவராக வேண்டும் என்கிற விருப்பம் எப்போதுமே இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் அவரை வலுக்கட்டாயமாக […]












