விஜய்யின் ஆன்மீகப் பயணம்: கொல்லூரில் சிறப்பு பூஜை!

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (12.06.2026) கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார்.

விஜய்யின் இந்த பயணம் ஆன்மிக நோக்கத்திற்கான தனிப்பட்ட பயணமாகும்.

டெல்லி பயணத்தை முடித்துவிட்டு விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார்.

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை அம்மன் கோவிலில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் முக்கிய பொறுப்பை ஏற்ற பிறகு, ஆன்மிக வழிபாட்டின் ஒரு பகுதியாக விஜய் கோவிலுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

இந்த கோவில் பல அரசியல் தலைவர்கள் வழிபடும் முக்கிய தலமாகவும் அறியப்படுகிறது.

விஜய் சிறப்பு விமானத்தில் மங்களூரு விமான நிலையம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொல்லூருக்கு செல்ல உள்ளார்.

அவரது வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

– சு. சுரேகா

You might also like