செய்தி:
பயந்தால் கடைசிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது!
- தவெக தலைவர் விஜய்க்கு புத்தி சொன்ன நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவிந்த் கமெண்ட்:
தானே பலதரப்பட்ட அனுபவங்களை சந்தித்திருப்பதன் விளைவாகவே இத்தகைய அறிவுரையை தவெக தலைவரான விஜய்க்கு வழங்கியிருக்கிறார் சீமான்.
இதையே தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரியான “வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்து வெம்பி விடாதே” என்று சொன்னதைத்தான் தற்போது வலியுறுத்தியிருக்கிறார் சீமான்.