அதிகாரபூர்வமான செலவைப் பற்றி அறிவித்த தேர்தல் ஆணையம்!

செய்தி:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 1,302 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்.

கோவிந்த் கமெண்ட்:

நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசு தரப்பில் ஆகும் செலவு என்று 1,302 கோடி ரூபாயை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதிகாரப்பூர்வமான செலவைப் பற்றி தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. ஆனால், தேர்தல் தேதி நெருங்குவதற்குள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் எவ்வளவு செலவுகளை பல்வேறு கட்சிகள் செலவழிக்கப் போகின்றன?

வழக்கமாக வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் கடைசி நேர பணப்பட்டுவாடா இந்தத் தேர்தலிலும் நடக்குமா? 

தங்களுடைய சொந்தத் தேவைக்காக பணமோ, கொஞ்சம் நகையோ எடுத்துச் செல்கிறவர்களையெல்லாம் மோப்பம் பிடித்து விரட்டிக் கைப்பற்றும் அதிகாரிகள், கட்சிகள் செய்யும் இறுதிக் கட்ட செலவுகளை இதே வேகத்தோடு கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்களா?

You might also like